day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிக்பாஸ் கனவில் – சுஜிதா

பிக்பாஸ் கனவில் – சுஜிதா

 

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாத்துறையில் அறிமுகமாகி  100கும் மேற்பட்ட சின்னத்திரை தொகுப்புகள் மற்றும் படங்களில்  நடித்தவர்  சுஜிதா தனுஷ் . பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவரின் தனலட்சுமி மூர்த்தி கதாபாத்திரம்  அனைத்து இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுஜிதாபெண்களின் குரல்பத்திரிகைக்கு அளித்த சிறப்புப்பேட்டி

கேள்வி : நடிப்பில் ஆர்வம் வரக் காரணம் என்ன? எந்த வயதில் வந்தீர்கள்?

பதில் : நடிக்கிறோம் என்பதே புரியாத வயதில்  நடிக்க வந்தேன். குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் எனக்கு நடிப்பு என்பது பொிய விஷயமாகவே தோன்றவில்லை. எனது அண்ணனால் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையாக நடித்திருந்தேன். அதனால் நிறைய நல்ல நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

கேள்வி : ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் பெண்களை உயர்த்திப்பிடிக்கும் கதை அம்சம் கொண்டதாக உள்ளது. அதுபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில் : இந்த சீரியலோட எழுத்தாளர் ஒரு பெண்தான். அவருடைய வே ஆப் திங்க்கிங் பாசிடிவ்வாக இருக்கிறது என்பதுதான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு நல்ல குடும்பத்தை ரசித்து கதையாகக் கொண்டுவந்து இருக்கிறார். ஒரு பெண்ணோட பார்வையாகத்தான் இந்த சீரியலை நான் பார்க்கிறேன். இந்த சீரியலைப் பொருத்தவரையில் யாருமே நெகடிவ் ரோல் கிடையாது. வில்லன், வில்லி என்று யாருமே கிடையாது. சிட்டிவேசன்தான் இந்த சீரியலில் நெகடிவ் அதாவது, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது ஏற்படும் போக்குவரத்து இடைஞ்சல், மற்றும் காலதாமதம் ஆகியவையே வில்லன், வில்லியாக வந்து நிற்கின்றன. அதுமட்டு மல்லாமல் அன்பு, பாசம் போன்றறையும் அதிகமாகவே உள்ளது. அடுத்த தலைமுறை வேறொரு கலாச்சாரத்துக்குள் போகாமல் இருப் பதற்காக இதுபோன்ற கதையம்சம் கொண்ட சீரி யல்கள் தேவையானதாகும்.

கேள்வி : பிக்பாஸ் ஷோ பற்றி உங்களது கருத்து என்ன?

பதில் : பிக்பாஸ் ஷோ என்பது பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிற ஒரு ரியாலிடி ஷோ. நம்முடைய தனிப்பட்ட கேரக்டரை ஆராயக்கூடிய ஒரு ஷோ. நாமே நம்மிடம் இருக்கிற நல்ல விஷயம் மற்றும் கெட்ட விஷயங்களைத் தொிந்துகொள் ளலாம்.

கேள்வி : பிக்பாஸ் ஷோவில் வாய்ப்பு கிடைத்தால் கலந்து கொள்வீர்களா?

பதில் : எனக்குக் குழந்தை இருப்பதால் கஷ்டம்தான். எவ்வளவு நாள் உள்ளே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் உள்ளே போகிறோம். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் இருக்க வேண்டும் என்று யாரும் போவதில்லை. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சண்டைகள் சச்சரவுகள்  இல்லாமல் அங்கு கொடுக்கப்படுகிற கேம்ஸ் எல்லாவற்றையும் பார்க்கும்போது ஸ்கூல் லைஃப்  ஞாபகம் வருகிறது. அங்கு கொடுக்கப்படுகிற வேடிக்கையான செயல்கள், விளையாட்டுகள், சீக்ெரட் டாஸ்க் எல்லாம் பார்க்கும்போது எனக்கும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

கேள்வி : சமீப காலமாக நெப்போட்டிசம் குறித்த சர்ச்சைகள் வந்தவண்ணம் இருக்கிறது. அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : அதைப்பற்றி பேசும்போது அது பூதாகாரமாகப் போய்க் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் அது இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏற்கனவே ஈசியாக ஒரு வழி வகுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் நடந்து செல்வதற்கோ அல்லது கையைப் பிடித்துக் கூட்டிச்செல்வதற்கோ ஒரு பேமிலி பேக்ரவுண்ட் இருப்பவர்கள் அதில் ஈசியாக செல்கிறார்கள். என்னதான் ஈசியாக கிடைத்தாலும் அங்கு திறமையும், கடுமையான உழைப்பும் இல்லை என்றால் அவர்களால் ஜெயிக்க முடியாது. நெப்போட்டிசம் மூலமாக வருகிறவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் நடிக்கலாம். தொடர்ந்து அந்த வாய்ப்பு என்பது கிடைக்குமா என்றால் கிடைக்காது

கேள்வி : உங்களது வெற்றிப் பயணம் என்று எதை சொல்வீர்கள்? இதுவரைக்கும் நீங்கள் செய்த சாதனை என்னென்ன?

பதில் : ஆந்திராவில் இரண்டு முறை சிறந்த குழந்தை நட்சத் திரத்துக்கான விருது கிடைத்துள்ளது. முந்தானை முடிச்சு படத்திற்காக எம்.ஜி.ஆர். கையால் விருது பெற்றேன் என்பது எனக்குப் பெருமைதான். ‘ஆடி வெள்ளிபடத்துக்காக கலைஞர்  கையால் விருது வாங்கினேன். அதுமட்டுமல்லாமல் சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் வாங்கி யுள்ளேன். அதேபோன்று ஒவ்வொரு  டிவி சேனல் களிலும் ஜூனியர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

,,,,

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!