day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திறமையால் மட்டுமே சாதிக்க முடியும்

திறமையால் மட்டுமே சாதிக்க முடியும்

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தனது நடனத்திறமையாலும், நடிப்புத்திறமையாலும் இளைஞர்கள் மற் றும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத் திருப்பவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. இவர் டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சார்லி சாப்ளின்-2 போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
டார்லிங் படத்தில் பேயாக வந்து பயமுறுத்தினார். இந்நிலையில், உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா நிக்கி கல்ராணியையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்தும் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் ‘பெண்களின் குரல்’ இதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி;
கேள்வி : கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நீங்கள் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்து சொல்லுங்களேன்?
பதில் : எனக்கு கொரோனா தொற்று இருப்பதைத்தெரிந்து கொண்டு நானே மீடியாக்களுக்குத் தொிவித்தேன். நான் மருத்துவர்களின் ஆலோசனைப்படி என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது. அதனால் பொிய அளவில் கஷ்டப்படவில்லை. இந்த பாதிப்பு நேரத்தில் தனிமையில் இருந்ததுதான் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. கொரோனா தனிமை ஒரு வித்தியாசமான அனுபவம். மேலும் சும்மா இருப்பதும், தனிமையில் இருப்பதும் எவ்வளவு கஷ்டம் என்பதைத் தொிந்துகொண்டேன். என்னோட தினசரி வேலைகளை நானே பார்க்க ஆரம்பித்தேன். கொரோனாவில் இருந்து நல்லபடியாக மீண்டு வந்தேன்.
கேள்வி : கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில் : கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நான் பொதுமக்களுக்கு சொல்வது என்னவென்றால் அரசு மற்றும் மருத்துவர்கள் சொல்கிற பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்றினாலே போதுமானது. கை கழுவுதல் வேண்டும், சானிடைசர் மற்றும் முகக்கவசம் அணிந்துகொண்டும், அதேபோல் தேவைப்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோயின் வீரியத்தை அறிந்து மக்கள் சுயஒழுக்கத்தோடு அரசு கூறியிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
கேள்வி : சினிமாத்துறைக்குள் நீங்கள் வந்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்?
பதில் : நான் சினிமாத்துறைக்குள் வந்தது திடீர் என்று நடந்ததுதான். மாடலிங் துறையில் இருந்து எனக்கு சினிமா வாய்ப்பு என்பது ‘ஜாக்பாட்’ அடித்ததுபோல் திடீர் யோகம்தான். அந்த வாய்ப்பை பயன்படுத்தி என்னுடைய திறமையை வைத்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு நல்ல படங்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறேன். மேலும் 4 தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறேன். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் அதிகளவு நடித்து வருகிறேன். தமிழிலும், மலையாளத்திலும் அதிக வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. எனது திறமைக்காக இதுவரை நான் 8 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
கேள்வி : உங்களுடைய எதிர்கால லட்சியம் என்ன சொல்லுங்கள்?
பதில் : நல்ல கதாபாத்திரமும் கதை அம்சமும் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும். மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்.
கேள்வி : நெபோட்டிசம் பற்றி மீரா மிதுன் வைக்கும் குற்றச்சாட்டு, அதாவது நடிகர் சூர்யா, விஜய் போன்றவர்கள் திறமை இல்லாமல் நெபோட்டிசம் வைத்தே சினிமாத்துறையில் ஈசியாக நுழைந்துவிட்டதாக கூறி வருகிறார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : நெபோட்டிசம் என்பது எந்தத்துறையில்தான் இல்லை. குறிப்பாக ஐடி, வர்த்தகத்துறை, தொழிற்சாலை மற்றும் பலதுறைகளிலும் இருக்கிறது. நெபோட்டிசம் இருந்தால் மட்டுமே சினிமாத்துறையில் சாதிக்க முடியாது. சினிமாத்துறையைப் பொருத்தவரையில் ஏன் நெபோட்டிசம் என்பது ரொம்ப பொிதாக பேசப்படுகிறது என்றால், சினிமாத்துறையில் பணியாற்றுபவர்களையும், நடிப்புத்துறையில் இருப்பவர்களையும் மக்கள் எளிதாக அடையாளம் கண்டுகொண்டு விடுகிறார்கள். சினிமாத்துறையைப் பொருத்தவரையில் திறமை, கடின உழைப்பு இருந்தால் வாய்ப்பு தானாகவே தேடி வரும். மேலும் சாதனைகள் புரியமுடியும். அதேசமயம், நெப்போட்டிசம் சினிமாவிலும் இருக்கிறது.

– நிக்கி கல்ராணி

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!