day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“சிறுத்தையை விரட்டிய சிங்கப்பெண் முதாட்டியின் துணிச்சல் வீடியோ”

“சிறுத்தையை விரட்டிய சிங்கப்பெண் முதாட்டியின் துணிச்சல் வீடியோ”

வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த மூதாட்டியை தாக்க வந்த சிறுத்தையை அடித்தே விரட்டிய மூதாட்டியின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மும்பையில் மூதாட்டி ஒருவர் வீட்டின் வெளியே அமர வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே பதுங்கியிருந்த சிறுத்தை மூதாட்டியை தாக்க காத்திருந்தது. இதையறியாத மூதாட்டி கைத்தடி தாங்கலுடன் வெளியே வந்து அமர்ந்துள்ளார்.

அப்போது அவரை தாக்க வந்த சிறுத்தையை பார்த்து அதிர்ந்து போன மூதாட்டி உடனே தனது கையில் இருந்த கைத்தடியை வைத்து சிறுத்தையை தாக்கினார். உடனே அந்த சிறுத்தை தப்பி ஓடியது. இதையடுத்து மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை தூக்கியுள்ளனர். முறத்தால் புலியை விரட்டிய தமிழச்சியின் கதையை கேட்டிருப்போம். இது போலவே தனது கைத்தடியால் சிறுத்தையை விரட்டிய மூதாட்டியின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!