day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனை நாட்களுக்குள் காவல்துறையை அணுக வேண்டும்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனை நாட்களுக்குள் காவல்துறையை அணுக வேண்டும்

சமூகத்தின் மிகப் பெரிய சிக்கலாக இருப்பது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் விஷயம்தான். பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து உடைந்துவிடுகிறார்கள். இப்படிப் பாதிக்கப்படும் பெண்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இது பற்றி பிரபல வழக்கறிஞர் ஆதிலட்சுமியைப் பேட்டி கண்டபோது பல நுணுக்கமான நடைமுறைகளை எடுத்துரைத்தார்.

 

பேட்டியிலிருந்து சில பகுதிகள்.

 

கேள்வி: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனை நாட்களுக்குள் காவல்துறையை அணுக வேண்டும்?

பதில்: பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண் முடிந்த வரை விரைவாக காவல்நிலையம் செல்ல வேண்டும். உதாரணமாக பாலியல் வன்முறை என்பது பல்வேறு வகையில் பார்க்கப்படுகிறது. ஒரு பெண்ணை தவறாக பார்த்தல், பெண்ணிடம் ஆபாசமாக பேசுதல், தொடுதல், பாலியல் பலாத்காரம் செய்தல் என இவை அனைத்தும் பாலியல் வன்முறையாகவே கருதப்படுகிறது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் முடிந்த வரை விரைவாக காவல்நிலையம் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது மருத்துவ அறிக்கையும், தடயவியல் அறிக்கையும் கொண்டு செல்லுதல் வேண்டும். பெண்ணில் உடலில் ஏற்படும் கீறல்கள், கிழிந்த ஆடைகள், விந்து படிந்த போர்வைகள் போன்றவற்றைக் கொண்டு தடயவியல் அறிக்கைகளை ஏற்பாடு செய்யலாம். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவே கேள்விகள் தொடுக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட பெண் பயத்தில் தடயங்கள் அனைத்தையும் அழித்து விழுகிறாள். இதனால் அவளுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

பாலியல் பலாத்காரம் என்பது நம் விருப்பமின்றி ஒப்புதலின்றி நடக்ககூடிய ஒன்று. அதற்காக நம்மை நாம் தண்டித்துக்கொள்ளக் கூடாது. பாலியல் பலாத்காரம் என்பது மழைக்காலங்களில் நம்மீது எதிர்பாராமல் வாகனம் வாறி அடிக்கும் சகதி போன்றது, அதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் பணி புரியும் இடத்தில் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு சிறப்பு சட்டம் உள்ளது. அலுவலகங்களில் பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் அனைத்து பெண்களும் தங்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்களை வெளியே கொண்டு வரவேண்டும். அப்பெண்ணின் குடும்பமும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

கேள்வி: காதல் என்ற பெயரில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு பின்னர் ஏதேனும் காரணம் கூறி விலகிவிடும் ஆண்களை பாலியல் குற்றவாளியாக கருத முடியுமா?

பதில்: இதனை இரண்டு விஷயங்களாக காணலாம். ஒன்று திருமணத்தைத் தாண்டிய ஒரு உறவு வைத்துக்கொள்வது. மற்றொன்று திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்வது. தெரியாமலோ அல்லது நம்பிக்கையின் பெயரிலோ உறவில் ஈடுபடும் போது அதில் ஏமாற்றப்படுவது குற்றம்தான். ஆனால் தவறு என்று தெரிந்தே வேறு ஒருவருடன் ஒரு பெண் உறவில் இருப்பது, பாலியல் குற்றமாக கருதப்படமாட்டாது.

கேள்வி: ஏமாற்றிய ஆண்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா?

பதில்: ஏமாற்றப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பாலியல் ரீதியான குற்றங்களுக்கு என்ன வகையான தண்டனைகள் உள்ளதோ அந்தந்த தண்டனைகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இதனை பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் பலாத்காரம், தனி மனித பலாத்காரமாகவோ கருதப்பட்டால் அதற்கு தகுந்த சட்டத்தின் தண்டனைகள் வழங்கப்படும். நமது நாட்டில் குடுமப அமைப்பிற்குள் ஏற்படக்கூடிய பாலியல் வன்முறை தவறாக கருதப்படாது. நம்பிக்கையின் பேரில் உறவில் ஈடுபட்டு விட்டு பின்னர் விலகி விடுவது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும். அப்போது அதற்கான தண்டனை வழங்கப்படும். இதனிடையே ஒரு பெண் தனியாக அறையை பயன்படுத்தும் போது எட்டிப்பார்ப்பது, ஒரு பெண்னை உடை களைய முயற்சிப்பது அல்லது உடலாலும், வார்த்தையாலும், செய்கையாலும்  செய்யக்கூடிய வன்முறை மற்றும் ஒரு பெண்ணை துன்புறுத்துவது இவை அனைத்தும் குற்றமாகவே கருதப்படுகின்றன. இவை அனைத்தும் தற்போது தண்டனை வழங்கக்கூடிய குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.

கேள்வி: வன்புணர்வு செய்யப்பட்டு அதனால் கர்ப்பமான பெண் கருகலைப்பு செய்ய சட்டம் இடமளிக்கிறதா?

பதில்: நம் நாட்டில் கருக்கலைப்பு என்பது மிகச் சிரமமான ஒன்றாக உள்ளது. ஒரு பெண் கர்ப்பமான 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஒரு மருத்துவர் அதற்கான அறிக்கை அளித்திருக்க வேண்டும். 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு என்றால் 2 மருத்துவர்கள் அறிக்கை அளித்திருக்க வேண்டும். அதற்கு மேல் காலதாமதமானல் நீதிமன்றத்தை நாட வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் சட்டத்துக்குட்பட்ட நாட்களுக்குள் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடி அதன் அனுமதியுடன் கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம். ஏனேனில் அது அவர் ஏற்புடைய கரு கிடையாது என்ற காரணத்தில் தான் இதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கேள்வி: திருமணம் ஆகாமல் கர்ப்பமான பெண் குழந்தையை பெற்று வளர்க்க சட்டத்தில் இடம் உள்ளதா?

பதில்: சட்டத்தில் இடமுண்டா என்று கூறுவதைக்காட்டிலும் நம் ஊர் வழக்கப்படி திருமணமாகாமல் கர்ப்பமாகி குழந்தை பெற்று வளர்ப்பது தர்மப்படி தவறு என்றே கூறுவர். ஆனால் ஒரு குழந்தை உருவாகி பிறந்தவிட்ட நிலையில் அதன் முழுப் பொறுப்பும் தாயையே சாரும். சமூகம் அக்குழந்தையை ஏற்றுக்கொள்ளாது என்ற அச்சத்திலுமே பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தையை குப்பைத் தொட்டியில் போடுதல், யாருக்கேனும் தத்துக் கொடுத்தல், விட்டுச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே சமூக மாற்றங்கள் தான் சட்ட மாற்றங்களை கொண்டு வரும் நிலை உள்ளது. நம் நாட்டில் தற்போதைய காலக்கட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகளை காட்டிலும் குழந்தைகளே பாலியல் உறவில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது. குழந்தைகளின் கல்வி முறையில் பாலியல் கல்வி குறித்து பயிற்றுவிக்க வேண்டும். ஒரு பெண் தான் கருவுற்ற போது தான் பெற்ற பிள்ளைக்கு தந்தை யார் என்று அவள் கூறியே சமூகத்திற்கு தெரியவரும். தந்தையில்லாமல் தானே வளர்க்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த குழந்தையை அவர் இயற்கையாக பெற்று எடுத்தாலும் சோதனை குழாய் குழந்தையாக இருந்தாலும் சட்டம் அதற்கு தடை விதிக்கவில்லை. அதே நேரத்தில் அதனை ஆதரிக்கவும் இல்லை.

கேள்வி: வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமுற்ற பெண் சிறுமியாக இருக்கும் பட்சத்தில் அவளுக்கு குழந்தை பிறந்தால் அக்குழந்தையை அவரே தான் வளர்க்க வேண்டுமா? அல்லது அரசிடம் குழந்தையை ஒப்படைக்கும் உரிமை உள்ளதா?

பதில்: யாராக இருப்பினும் தமிழகத்தில் தொட்டில் குழந்தை என்னும் திட்டம் உள்ளது. பராமரிக்கப்பட முடியாத எந்த ஒரு குழந்தையையும் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கலாம். பெண்ணாக இருந்தாலும் ஏழ்மை நிலையில் இருந்தாலும் தனிமையில் இருந்தாலும் அல்லது குழந்தையின் தாய் சிறுமியாக இருந்தாலும் அக்குழுவிடம் குழந்தையை ஒப்படைக்கலாம். ஆதரவற்று இருக்கும் குழந்தைகளுக்கும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளுக்கும், தான் கருவுற்றதை அறியாத குழந்தைகளுக்கும் சமூக நலன் அளித்துப் பாதுகாக்க பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பெண்கள் தொடர்பான சட்டம்.

கேள்வி: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஏதேனும் உதவி வழங்குகிறதா?

பதில்: பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டம் உள்ளது. அதில், அரசு உதவி வழங்குகிறது. அது குறித்த தகவல்களுக்கு அங்குள்ள சட்ட சேவை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

கேள்வி: குடும்பத்திற்கோ அல்லது சமூதாயத்திற்கோ தெரியாமல் பாலியல் குற்றங்கள் குறித்து ஒரு பெண் காவல்துறையில் புகார் அளிக்க முடியுமா? அவ்வாறு புகார் அளிக்கும் பெண்ணை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படுமா ?

பதில்: பொள்ளாட்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரம் அரசின் மூலம் வெளியானது. நிர்பயா மரணத்திற்கு பிறகு பெண்ணின் பெயரையோ புகைப்படத்தையோ வெளியிடக்கூடாது என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. ஜோதி சிங் என்ற பெயரை நிர்பயா என்று தான் நாம் தற்போது குறிப்பிட்டு பேசி வருகிறோம். ஜோதி சிங் என்பது தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் என்பது தாமதமாகவே நமக்கு தெரியவந்தது. இதேபோல் காஷ்மீரில் ஆசிபா என்ற குழந்தை மரணம் குறித்து வெளியான செய்திகளில் அனைத்து பத்திரிகைகளும் ஊடகங்களும் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தையும் பெயரையும் அவரின் தந்தை பெயரையும் வெளிப்படையாக தங்களது பத்திரிகையில் போட்டன. எனவே பத்திரிகை, ஊடகங்களும் அரசு அமைப்புகளும் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியே தெரியப்படுத்துகையில் சட்டம் கூறுவதில் என்ன பயன் என்று மக்களிடையே கேள்வி எழுகிறது. பெண்னின் பாதுகாப்பிற்காகவும், தங்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் குறித்து பெண்கள் அச்சமின்றி புகார் அளிக்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று கூறப்படுகிறது. இன்றைய சட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியே கூறவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. பாலியல் வன்முறை பணியிடத்திலும் சட்டப்பிரிவு 16ன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறவேண்டும் என்றோ, சாட்சியங்களின் பெயரையோ கூறவேண்டும் என்று கேட்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் துணிவுடன் வெளியே வரவேண்டும் என்பதற்கு மதிப்பளிக்க வேண்டும். அதனை மதிக்காதவர் யாராயினும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கேள்வி: தெலுங்கானா என்கவுண்டர் போன்ற தண்டனை கொடுத்தால் தான் பாலியல் குற்றங்கள் குறையுமா? வழக்கறிஞராக தெலுங்கானா என்கவுண்டர் குறித்த உங்கள் பார்வை என்ன?

பதில்: ஒரு பெண்ணாகவும் வழங்கறிஞராகவும் ஒருவரின் உயிரை பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று நினைக்கிறேன். மேலும் வளைகுடா நாடுகளில் தவறு செய்தவர்களின் கழுத்தை வெட்டுதல், நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ளுதல் போன்ற தண்டனைகளால் தான் அங்கு குற்றங்கள் நிகழ்வதில்லை என்று தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. தூக்கு தண்டனை அளிப்பதன் மூலம் குற்றங்கள் குறையுமா என்றால் கண்டிப்பாக குறையாது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து சட்டத்திருத்தங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வழக்கை விரைவாக முடிக்கவே இதுபோன்ற வழக்குகளில் தூக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. ஒருவர் என்கவுண்டர் செய்கிறார் என்றால் அவர் சட்டத்தை தன் கையில் எடுக்கிறார் என்று அர்த்தம். சட்டத்தை கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இதுபோன்ற தண்டனைகளுக்குப் பதிலாக குற்றவாளிகளுக்கு கடுங்காவல் சிறை தண்டனையோ, வாழ்நாள் வரை சிறை என்ற தண்டனைகளையோ வழங்கினால், அது குற்றம் செய்ய எண்ணுபவனை பயம் கொள்ள செய்யும்.

கேள்வி: போலியாக ஒரு பெண் ஒரு ஆண் மீது புகார் அளித்தால் அப்பெண்ணுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனை என்ன?

பதில்: இன்றைய காலக்கட்டத்தில் வரதட்சணை பொன்ற புகார்கள் மூலம் ஆண்கள் மீது சில பெண்கள் பொய் புகார் சுமத்தக்கூடிய நிலை உள்ளது. வரதட்சணை தடை சட்டம், வீட்டு வன்முறை சட்டம் ஆகியவை கொடுக்காத ஒரு விஷயத்தை பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் கொடுக்கிறது. அதில் தவறு செய்யும் ஆண்களுக்கு சட்டம் என்ன தண்டனை வழங்குகிறதோ அதே தண்டனையையே பெண்களுக்கும் வழங்கலாம் என்றுள்ளது. கணவர் தனிக்குடித்தனம் வரவில்லை, மாமியர் கொடுமை போன்ற காரணங்களுக்காக வரதட்சணைத் தடை சட்டம் மற்றும் வீட்டு வன்முறை சட்டம் போன்றவைகளை பயன்படுத்துவது மிகவும் தவறு. இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பது நம் கடமையோ அதுபோல் பொய்யான புகாரால் பாதிப்புக்குள்ளான ஆணை காப்பதும் பெண்ணின் கடமை. அதேபோல் ஆண்களை தவிர்த்து பெண்ணியம் பேசுவது எங்கேயும் செல்லுபடியாகாது. இங்கு சமத்துவத்தை பேண வேண்டும். ஆண்கள் செய்யும் குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற தவறுகளை பெண்ணியம் என்று கூறி பெண்கள் செய்வது ஏற்புடையதல்ல. சட்டம் என்பது கூர்வாள் போன்றது. அது தவறாக கையாளப்பட்டால் அதை பயன்படுத்துவோரையே தண்டிக்கும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!