day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

காவலன் செயலி

காவலன் செயலி

செல் போன்களால் பல  ஆபத்து  ஏற்படுகிறது  என ஒருசில  கருத்துக்கள்  இருந்தாலும், செல்போன் வைத்திருப்பதால் ஆபத்திலிருந்து  காத்துக்கொள்ளலாம்   என்ற  தகவலை  தமிழக  காவல்  துறை   அறிவித்துள்ளது.

நாம்  பயன்படுத்தும்  ஸ்மார்ட்  போன்களில்  காவலன்  என்ற செயலியை  பதிவிறக்கம்  செய்து  கொண்டால், பெண்களுக்கு  பாலியல்  ரீதியான   துன்புறுத்தலோ  அல்லது  ஆபத்தான  சூழ்நிலையோ  ஏற்படும்போது காவல் துறையின் அவசர உதவிக்கு,  அவசர  உதவிக்கான எஸ்  ஒ  எஸ்  பட்டனை  ஒருமுறை தொட்டால் போதும் . இல்லை என்றால்   3  முறை போனை  உதறினால்  போதும். ஒரே  நேரத்தில்  காவல்  கட்டுப்பாட்டு  அறைக்கு  அபாய  மணியும், நமது  மொபைலில் அபாய  நேரத்தில்  அழைக்கப்பட  பதிவு  செய்து  வைக்கப்பட்ட நமது  உறவினர், அல்லது  நண்பர்கள்  என  மூவருக்கும்  தகவல்  செல்லும்.

இதை  பயன்படுத்தும் நபரின்  இருப்பிட  தகவல், அந்த  இருப்பிடத்தின்  வரைபடம்  காவல்துறை  உட்பட்ட  4 எண்களுக்கு  தானாகவே  பகிரப்படும். அதுமட்டுமல்லாது  அவசரபட்டனை  தொட்டவுடன்  செல்போனில்  உள்ள  கேமரா  தானாகவே  15 வினாடிகள்  வீடியோ  எடுத்து  காவல்  கட்டுப்பாட்டு  மையத்துக்கு  அனுப்பிவிடும். செல்போன்  அலை தொடர்பு  இல்லாத  இடங்களிலும்  இந்த  எச்சரிக்கைச் செய்தியை  அனுப்பமுடியும்.

இந்த  “காவலன்  செயலி” பயன்பாடு  தற்போது  கல்லூரி  மாணவிகளிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தி  இருக்கிறது. வேலைக்குச் செல்லும்  பெண்கள், மாணவிகள்  என  பெண்கள்  அனைவரும்  இச்செயலியை  தமது  ஸ்மார்ட்  போன்களில்  பதிவிறக்கம்  செய்து  கொள்வது  நல்லது. மேலும் இச்செயலியை பயன்படுத்தியதால் சில குற்றவாளிகளும் தற்போது   கண்டுபிடிக்கப்பட்டு  தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளது தெரிய  வந்துள்ளது.

ஸ்மார்ட் போன்  இல்லாதவர்கள்  அவசர  உதவி 100,1091, 1098 ஆகிய  எங்களோடு  தொடர்பு  கொள்ளலாம் எனவும்.  இந்தியஅளவில்  181 என்ற  எண்  பெண்களுக்கான  உதவி  எண்ணாகவும்  அறிவிக்கப் பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!