day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரானார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவரானார் அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). இந்த பதவி கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு அகர்கரை நேர்காணல் செய்து, அவரை இந்த பொறுப்பில் நியமிக்கலாம் என பரிந்துரை செய்தது. அதன் பேரில் தற்போது அவர் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் அவர் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த பொறுப்புக்கு நான்கு பேர் விண்ணப்பித்திருந்தாக தெரிகிறது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விரைவில் விளையாட உள்ளது. அதற்கான அணியை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தலைமையில் தேர்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் அகர்கர்: 45 வயதான அகர்கர், இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 1998 முதல் 2007 வரை விளையாடி உள்ளார். 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இது மட்டுமல்லாது 110 ஃபர்ஸ்ட் கிளாஸ் மற்றும் 270 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி உள்ளார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியவர். 1999, 2003 மற்றும் 2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடி உள்ளார். 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2007 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!