day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆன் லைனுக்கு அடிமையாகும் குழந்தைகள் – வந்தனா

ஆன் லைனுக்கு அடிமையாகும் குழந்தைகள் – வந்தனா

 

கொரோனா ஊரடங்கால் அலுவலகம், பள்ளி என்று எல்லாமே ஆன் லைன் வழியாகத்தான் நடக்கிறது. முன்பெல்லாம் குழந்தைகளிடம் செல்போனைத் தரத் தயங்கிய பெற்றோர் இன்று ஆன் லைன் வகுப்புகளுக்காக அவர்களாகவே குழந்தைகளுக்கு செல்போன் வாங்கித் தருகின்றனர். அதில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பலரும் கண்டுகொள்வதில்லை. எப்போதுமே படித்துக் கொண்டிருக்க முடியாது,  சிறிது நேரம்  ஆன் லைனில் விளையாடினால் தவறில்லை என்றும் சிலர் நினைக்கிறார்கள். இப்படி விளையாடுவது பெரும்பாலும் வினையாகவே முடிந்துவிடுகிறது. ஆன் லைன் விளையாட்டுகள் குழந்தைகளைப் பேரலையாக வாரிச்சுருட்டிக் கொள்கிறது. அதிலிருந்து மீளும் வழி தெரியாமல் ஆன் லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கிற குழந்தைகளை எப்படி மீட்பது?

கேமிங் அடிக்‌ஷன், சோஷியல் மீடியா அடிக்‌ஷன், இன்டர்நெட் அடிக்‌ஷன் என்று பலவிதமான வகைகளில் பிள்ளைகள் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்று  சொல்லலாம். முக்கியமாகச் சொல்லப்போனால் இப்போது இது ரொம்பவும் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. அடிக்‌ஷன் என்பது இப்பொழுது பொதுவான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் சோஷியல் மீடியா அடிக்‌ஷன், கேட்ஜெட் அடிக்‌ஷன் என்பது அதிகமாக இருக்கிறது.  இணையத்திலேயே நாள் முழுவதும் பழியாகக் கிடப்பது மனநல சம்பந்தப்பட்ட நோயாகும். ஊரடங்கால்தான் குழந்தைகள் இப்படி இணையதள விளையாட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம்.

இதில் பல்வேறு நிலைகள் உண்டு. முதல் நிலை செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவது, இரண்டாவது நிலையில் அது அதிகரித்து அதன்பின்தான் அடிக்‌ஷனில் வருகிறது. ஒரு சிலருக்கு செல்போனைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு இருக்கும். நேரம் போகவில்லை அல்லது போரடிக்கிறது என்றால் மட்டுமே செல்போனைப் பார்ப்பார்கள். இது அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இப்படிக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நேரம் அதிகரித்து ஓவர் யூஸ் போகும்.  ஓவர் யூஸ் இல் இருந்து மாறி மிஸ் யூஸ் அல்லது அப்யூஸாக மாறும்.  பின்புதான் அடிக்‌ஷனாக மாறுகிறது.

செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவது, அதற்கு அடிமையாகி அதிலேயே பழியாகக் கிடப்பது என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்.  பயன்பாட்டின் நிலைகள் குறித்த தெளிவு வேண்டும். செல்போனைப் பார்க்கும் நேரம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்போது பரவாயில்லை. கட்டுப்பாடு இல்லாமல் நம்முடைய மனம் அதிலேயே முழுமூச்சுடன் ஈடுபட்டு அதையே நினைக்கத் தொடங்கும். மற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு நம்முடைய மனதைச் செலுத்த முடியவில்லை என்றால் நாம் செல்போனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறோம் என்று பொருள். படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள். வகுப்பில் இருக்கும்போதே அவர்களுடைய மனம் திசைமாறி வேறொரு விஷயத்துக்குப் போகும். வேலை செய்பவராக இருந்தால், வேலையில் கவனம் குவியாது. அதனால் அவர்கள் மற்ற விஷயங்களைப் புறந்தள்ளி விடுவார்கள். உதாரணத்துக்கு சாப்பிடுவது, வேலை செய்வது, படிப்பது அல்லது மற்றவர்களுடன் நேரம் செலவிடுவது. கணவன்-மனைவி என்றால் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என்பது குறையும். இவற்றை எல்லாம் அவர்கள் ஒதுக்கிவிட்டு, முழுநேரமும் ஆன் லைன் விளையாட்டு அல்லது ஆன்லைனில் மூழ்கிக்கிடந்தால்தான் அதைக் கட்டுப்பாடற்ற பயன்பாடு அல்லது முறையற்ற பயன்பாடு என்போம்.

குழந்தைகள் இப்படி முழுநேரமும் ஆன் லைன் விளையாட்டுகளில் மூழ்கிக் கிடக்கப் பெற்றோர்தான் முழுக்க முழுக்க காரணம் என்று அவர்கள் மேல் பழியைத் தூக்கிப்போட்டுவிட முடியாது. பெற்றோர், குழந்தைகளிடம் நேரம் செலவழித்து இது குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்தி என்னென்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் இந்த அடிக்‌ஷனுக்குப் போக மாட்டார்கள்.  சொல்லப்போனால், ஒரு பகுதி வேண்டுமானால் பெற்றோர்கள் மீது தவறு இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். நாம் கவனிக்கிறோம் என்றால் குழந்தைகள் தேவையில்லாமல் ஆன் லைனில் அதிக நேரம் செலவிட மாட்டார்கள். அது அடுத்த நிலைக்குப் போகாது. ஆளுமைத்தன்மை கோளாறினாலும் சிலநேரம் இது நடக்கும். இரண்டாவதாகப் பார்த்தால் ஆரம்ப காலகட்டத்தில் கற்றல் குறைபாடு இருந்தால் அல்லது அவர்களுக்குப் படிப்பதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதிலிருந்து திசை திருப்ப நினைத்து ஆன் லைனுக்கு வருவார்கள். அதுவே காலப்போக்கில் அடிக்‌ஷனாக மாறலாம். மனச்சோர்வு, பதற்றம், நிராகரிப்பு போன்றவற்றாலும் குழந்தைகள் இப்படி ஆன் லைனுக்கு அடிமை யாக மாறலாம்.

கேமிங் அடிக்‌ஷன் என்பது எல்லை மீறிய அடிமைத் தனமாக மாறுகிற நிலைமையில் தான், அக்ரஷன் இரண்டுவிதமாக வெளிப்படும். ஒன்று அவர்களையே அவர்கள் காயப்படுத்திக் கொள்வார்கள். இன்னொன்று, மற்றவர்களை அவர்கள் காயப்படுத்துவது. இது ஆளுமைத்தன்மை கோளாறால் வருவது. முதலிலேயே சொன்னதுபோல, இதுஒரு மனநலப் பிரச்சினை, மனநல நோய். உதாரணத்துக்கு நாம் சாதாரணமாகக் காய்ச்சலுக்கு எப்படி சிகிச்சை எடுக்கிறோமோ அதுபோன்றுதான் இதற்கும் சிகிச்சை இருக்கிறது. அதனால், ஆன் லைனில் செலவிடும் நேரம் எல்லைமீறும் அளவுக்குப் போவதற்கு முன்பு அங்கேயே தடைசெய்து சிகிச்சை அளித்தால் ஓரளவுக்கு இதைக் குணப்படுத்திவிடலாம். ஒருமுறை சிகிச்சை எடுத்துவிட்டு, திரும்பவும் வந்து ஆன் லைனில் மூழ்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ஒருமுறை காய்ச்சல் வந்தால் அடுத்த முறை காய்ச்சல் வராது என்று சொல்ல முடியாது. ஆனால், காய்ச்சல் வராமல் இருப்பதற்கு நம்முடைய நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதற்கு என்ன பண்ண வேண்டும்? எதனால் திரும்பத் திரும்ப நமக்குக் காய்ச்சல் வருகிறது என்று பார்ப்போம்தானே. அதேதான் இதற்கும்.

குழந்தைகளை நாம் கண்காணித்து அவர்களின் செல்போன் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் நிலைமை கைமீறிப் போகக்கூடும். அவர்களின் கோபம் அதிகரித்து மிகவும் மூர்க்கத்துடன் நடந்துகொள்வார்கள். தன்னைக் காயப்படுத்திக்கொள்வது அல்லது தற்கொலை  செய்துகொள்வது  அல் லது பெற்றோரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது போன்றவற்றில் அவர்கள் ஈடுபடக்கூடும். ஏனென்றால், இது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுடைய யோசனை, சிந்திக்கும் திறமையில் பிரச்சினை வந்துவிடும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல், அந்த ஒரு நிமிடம் உணர்வுவயப்பட்டு எதையாவது செய்துவிடுவார்கள். அந்த ஒரு நிமிடத்தில் என்ன செய்கிறோம் என்று அவர் களுக்கே தெரியாது. உடனடித்  தீர்வு தான் அவர்களது நோக்கமாக இருக்கும். அவர்களது செயலின் பின் விளைவுகள் குறித்து யோசிக்க மாட்டார்கள். எந்தவித யோசனையும் இல்லாமல் அந்த நேரத்துக்கு முடிவெடுத்துச் செயல்படுவார்கள். இப்படியெல்லாம் நேராமல் தவிர்க்க வேண்டுமென்றால் குழந்தைகள் செல்போனில் செலவிடும் நேரத்தைப் பெற்றோர் கண்காணித்துக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.  நிலைமை கைமீறுவதாகத் தோன்றினால், உடனடியாக மனநல ஆலோசனை பெறுவது அவசியம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!