வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி கூட்டத்தில் காட்பாடி வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனுக்குடன் மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து வண்டறந்தாங்கல் பகுதியில் வசித்து வரும் இருபத்தி ஒன்பது நரிக்குறவர் குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, பிளாஸ்டிக் வாலி, பாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் தீனதயாளன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.