10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்தநிலையில், பொதுத்தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, பொதுத்தேர்வு மையங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக மாற்று வசதிகளை ஏற்படுத்த மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தவிர, பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும்கூட பொதுத்தேர்வின் போது மின்தடை ஏற்படக்கூடாது என மின்சார வாரியம் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்ய வேண்டும். மின்மாற்றிகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக அவற்றை மாற்றவும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.