இன்று தாக்கல் செய்யப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 1.86 கோடி மதிப்பீட்டில் இணைய இணைப்பு வழங்கப்படும் எனவும், மாணவ, மாணவியரிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 7 கோடியே 50 லட்சம் மதிப்பில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, மாணவிகளுக்கு 23 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் எனவும் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், அத்துடன் பள்ளிகளை பராமரிப்பதற்காக ரூ. 16 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.