மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 3ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன்பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து நித்யானந்தா உத்தரவின்படி ஆசிரமம் சார்பில் அறுசுவை உணவுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை வாங்குவதற்காக பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.