சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், ‘தி லர்கிங் ஹைட்ரா’ (The Lurking Hydra) என்ற புத்த வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது. இந்தவிழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தி லர்கிங் ஹைட்ரா புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நாட்டையே ஒரு சில அமைப்புகள் சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார். பயங்கரவாதத்துக்கு எதிராக எப்போதும் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்றார். மேலும் இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் இந்த புத்தகம், இந்திய ராணுவம் குறித்த சிறப்புகள் பற்றிய சிறந்த ஆவணமாக இருக்கும் என தமிழக ஆளுநர் தெரிவித்தார்.