மும்பையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக்கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். ‘இப்போதைக்கு கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி குறிப்பிட்ட சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், யுபிஐ மூலம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களிலும் அறிமுகம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.