வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பல்வேறு உணவகம், கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தில், தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும், உணவு பொருட்களில் கலப்படம் செய்யக்கூடாது, எடையை சரியாக வழங்க வேண்டுமென மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கி கூறப்பட்டது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.