வேலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஊரீசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரில் பட்டமளிப்பு விழா வேலூர் பேராயர் சர்மா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒசூர் அரசு கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 1131 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்தவிழாவில் கல்லூரியின் முதல்வர் நெல்சன் விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ஒசூர் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன், ’நீங்கள் பட்டம் பெற காரணமான தாய் மற்றும் தந்தையை மறக்க கூடாது. இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் 27.1 சதவிகிதமாக உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4 சதவிகிதமாக உள்ளது. மேலும், நாட்டிலேயே அதிகமாக உயர்கல்வி கற்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 4,38,207 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர். இதில் ஆண்கள் 1,92,230 பேர் மற்றும் பெண்கள் 2,45,977 பேர் ஆகும். இதன் மூலம் அதிக அளவு பெண்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. ஆனால், தற்போது வகுப்பறைகளில் மாணவர்கள் நடக்கும் விதம் வேதனையளிக்கிறது. எனவே கடின உழைப்புடன் நேர்மையாக இருந்தால் உங்களுக்கு வெற்றி உறுதி” என்று அவர் கூறினார்.