கோவை மாவட்டம் புதூர் பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் குண்டம் திருவிழா எனப்படும் தீமிதித் திருவிழா நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்ததிருவிழாவில் அடுத்ததாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதனையடுத்து, கோவில் நிர்வாகி தலைமையில் விழாவின் இறுதி நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிழ்ச்சியில், கோவை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அக்னிகுண்டம் இறங்கியபோது அவர்களுக்கு மத்தியில் இரண்டு குதிரைகளும் குண்டத்தில் இறங்கியது. குதிரைகள் தீக்குழி இறங்கிய காட்சி அந்தபகுதி மக்களை மிகவும் பரவசப்பட வைத்தது.