கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு பொது நிதி ஒதுக்குவது குறித்து, முறையாக கடிதம் அனுப்புவது இல்லை எனவும், டெண்டர் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்குவது குறித்து, கடிதம் முறையாக அனுப்பப்படுவதாகவும், திமுக அரசு யாருக்கும் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதில்லை என்று திமுக உறுப்பினர் கார்த்தி கூறியுள்ளார். இதுகுறித்து பேசி கொண்டு இருக்கும்போதே இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரத்துக்கு அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், திமுக உறுப்பினர்கள் ஆறு பேர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்திலிருந்து பாதியில் வெளிநடப்பு செய்தனர்.