day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தவறு யாருடையது? – ஆன்றனி ஜமுனா

தவறு யாருடையது? – ஆன்றனி ஜமுனா

அந்த இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது மாடியில் அவள் குடியிருந்தாள் தன் இரண்டு மகன்களுடனும் தன்னைவிடப் பத்து வயது மூத்த தன் கணவனுடனும்.
ஏனோ அவளின் பதினைந்து வயதிலேயே வறுமைக்குப் பலியாகிவிடக் கூடாதே என்ற பயத்தில் கைம்பெண்ணான தன் தாயால் திருமணம் என்னும் பந்தத்தில் தள்ளிவிடப்பட்டிருந்தாள். தாம்பத்தியத்திற்கான நிஜமான அர்த்தம் தெரியாமலேயே தினம் தினம் அப்போது முறுக்கேறி மேலே பாய்ந்து பிராண்டித் தன் அத்தனை காமத்தையும் அவள் மேல் அரங்கேற்றிய கணவன் மூலம் அதிரடியாய் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைப்பேற்றையும் முடித்து அதற்கு மேல் அவித்துப்போட பணமில்லாததால் கணவனின் அனுமதியுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தாள்.
அவளின் முப்பது வயது வரை தாம்பத்தியம் அவளுக்கு நரகத்தின். வாசலிலேயே நடந்தது. பிள்ளை வளர்ப்பிலும் கணவன் சேவையிலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை மகன்களுக்கு படிப்பிப்பதிலும் அவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தியவளுக்குச் சுய சந்தோஷத்தைப் பற்றிய நினைப்பே இல்லை. கடமை செய்து மனைவிக்கும் தாய்க்குமான வாழ்க்கையைச் சிறப்பாய் வென்றிருந்தாள்.
அதற்குப்பிறகு பத்துவயது மூப்புக் காரணத்தால் கணவன் வலுவிழந்துபோக இவளுக்கு அப்போதுதான் தன் காமம் தலைதூக்கி வெளியே எட்டிப்பார்த்தது. அவள் கணவனிடம் எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இப்போதும் ஒவ்வொரு இரவும் நரகமாகத்தான் கழிந்தது.
முப்பதிலும் இருபதைப் போல் தோற்றமளித்தாள். சின்ன முகம், செதுக்கிய இடை, நிமிர்ந்து தூக்கிய மார்பகங்கள், பருத்துத் தெறித்த பின்னிடை, அளவான உயரம், ஆரஞ்சு பழத்தோல் நிற தேகம். இருபது வயது மிஸ் யூனிவர்ஸ்போல் இருந்தாள். ரோட்டில் குழாயடிக்குத் தண்ணி பிடிக்கப்போனால் தெரிந்தவன் தெரியாதவன் என அத்தனை இளங்காளையர்களும் திரும்பிப் பார்த்துக் கண்ணடித்துச் சென்றனர். அதில் சிலர் அவளிடம் காதல் கூறி கவியெழுதித் தந்தனர். ஏனோ அவளை அவையெல்லாம் அப்போது பெரிதாகப் பாதிக்கவில்லைதான்.
காதல் சொல்லி திருமணம் முடிக்க ஆசை என்பதுவரை சென்றிருந்த சில இளைஞர்களிடம் கணவன் பற்றியும் மகன்கள் கல்லூரி படிப்பவர்கள் என்ற உண்மையையும் கூறி அவர்களை வாய்பிளக்கச் செய்து பக்குவமாய்ச் சொல்லிப் புரியவைத்திருக்கிறாள்….
அப்போதும் அவள் தன்னடக்கத்தோடே வாழ்ந்திருந்தாள். தன் மோகதாபத்தைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டாள். அதற்கு மேல் தன்னைத் தொந்தரவு செய்தால் தன் தற்கொலைக்கு அவர்கள்தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டுச் செத்துவிடுவதாகக்கூட கூறி அவ்விளைஞர்களின் வாயை அடைத்திருக்கிறாள். அவளின் முப்பத்தைந்து வயதுவரை மனதளவிலும் உடலளவிலும் கற்புடனே காலம் தள்ளியிருந்தாள்.
அன்று ஒருநாள் தன் தம்பிக் குழந்தையைக் காலை வெயில் கிடைப்பதற்காக மொட்டைமாடிக்கு எடுத்துச் சென்றாள். வெயில்படும் இடத்தில் கையில் குழந்தையுடன் கன நேரம் நின்றவள் கால்வலிக்க, திண்டில் அமர்ந்தாள். மடியில் மழலையுடன் மரங்களையும் மயக்கும் காற்றிலும் தன்னை மறந்து ரசித்துக்கொண்டே திரும்பியவள் கண்களில் அடுத்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் நான்கு இளைஞர்கள் தண்டாலுடனும் கர்லாக்கட்டையுடனும் வெயிட் தூக்கிக்கொண்டும் தங்கள் கட்டுடலைக் கச்சிதமாய்க் காட்டியபடி பயிற்சியில் இருந்தது தெரிந்தது. பணக்கார வீட்டுப் பசங்களுக்கே உரித்தான வசீகரிக்கும் முகத்துடனும் நாகரீக சிகை முக அழகுடனும் இருந்தனர்.
இவற்றைப் புதிதாய்க் கண்டவளுக்கு உள்ளுக்குள் இளமை பொங்கிச் சிதறிற்று. அதுவரை தூங்கிக்கொண்டிருந்த தேகச்சூடு அனல்பறக்கக் கிளம்பிற்று. அது அவளை அந்தச் சொர்க்கத்திற்கே அழைத்துச் சென்றது. அவர்களின் கட்டுடலைப் பார்த்தால் மட்டும் போதும், அவள் உடலெங்கும் காமம் பரவியது.
ஒரு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் மாடியில் அவர்களைப் பார்த்துவிட்டுக் குளித்து ஆடை மாற்றிவிட்டுத் தண்ணீர் பிடிக்கக் குழாயடிக்குச் சென்று தன் வரிசை வரும்வரை காத்திருந்தாள். இன்னும் இரண்டு பேர் தாண்டியதும் தன் முறை வரும் என்றபோது ரோட்டில் கண்பதித்தவளின் கண்கள் அகல விரிந்தன. அந்தக் கட்டுடல் இளைஞர்கள் பயிற்சி முடித்துவிட்டு அந்தச் சாலைவழியாக அவளைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் மட்டும் இவளைப் பார்த்து உதட்டைக் குவித்து கண்ணடித்து ஏதோ செய்கை செய்துவிட்டுச் செல்லவும் இவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் அவளுக்கு அது ஏனோ தனக்குள் புதுமலர் பூக்கச் செய்ததை உணர்ந்தவள் மீண்டும் மீண்டும் அவனை அருகில் காண ஆவலோடு அவன் பயிற்சி முடித்து வரும் நேரம் சரியாகக் கணித்துத் தானும் குழாயடிக்குச் செல்வாள்.
காலையில் மாடியில் மடியில் குழந்தையுடன், அடுத்துக் குழாயடியில் கையில் குடத்துடன் என மாறி மாறி ஒவ்வொரு நாளும் அவனின் பார்வைக்காக ஏங்கித் தன் காலைநேர வேலைகள் சிலவற்றைத் தள்ளிப்போட்டாள். அவனும் மாடியில் இவளைக் கண்டுகொள்ள மாட்டான். ரோட்டில் இவளுக்கு இதழ்க்குவியல் முத்தமும் கண்களால் காதல்பேசலும் கொள்ளாமல் போகமாட்டான். அவள் அவனுக்கு இப்போது கைப்பொம்மையாகவே மாறியிருந்தாள். அவன் பார்வைக்கும் கட்டுடலின் கவர்ச்சிக்கும் அடிமையாகிக் கிடந்தாள்.
அன்று ஒருநாள் மாலை மங்கிய நேரம் அவள் அதே குழாயடி ரோட்டில் கடையிலிருந்து பொருட்கள் வாங்கிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள். எங்கிருந்தோ காரில் வந்த அவன் அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அவளை மறித்துக் காரை நிறுத்தினான். காரில் இருந்துகொண்டே அவளிடம் கண்களால் காருக்குள் ஏறு என்றான்.
தூக்கிவாரிப்போட்டது அவளுக்கு. அப்போதுதான் அவளுக்குத் தான் செய்த தவறு என்ன என்பது புரிந்தது. விலகி நடக்க ஆரம்பித்தாள். அவன் விரட்டிச்சென்றான். மிரட்ட ஆரம்பித்தான். கடத்திச் செல்வேன் என்றான். தனக்கு அவள் வேண்டும் என்றான். அவளோ கண்ணீர் விட்டாள். கையெடுத்துக் கும்பிட்டாள். அவன் கண்டுகொள்ளவில்லை. இரும்புக்கரம் கொண்டு அள்ளித் தூக்கி காருக்குள் தள்ளினான்.
தூரமாய்க் கொண்டுசென்று ஆளில்லாத குளக்கரை ஒன்றின் அருகில்வைத்து அவளுடனான காமப்பசியை காருக்குள் வைத்தே காட்டுமிராண்டித்தனமாய் நடத்தி முடித்துவிட்டு மீண்டும் இருட்டில் அதே இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றான்.
கிளம்பிச் செல்லும்போது, “நீதான் என்னை மயக்கிவிட்டாய். உன் அழகுதான் நான் இவ்வாறு நடந்துகொள்ளத் தூண்டியது. மன்னித்துவிடு” என்ற ஒரு வார்த்தையில் அவன் மொத்தமாய் தான் நல்லவன், அவள் சரியில்லை என்று நடந்துகொண்டான்.
அதுவரை அவள் கட்டிக்காத்த கற்பு கரைந்து காணாமல் போனது எவனோ ஒருவனிடம். அதற்குமேல் தன் கணவனின் கள்ளமில்லா கண்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாதவள் தன்னிலை மறந்து எங்கோ நடந்தாள். நடந்தாள்.அதே குளக்கரை நோக்கி நடந்து மறைந்தாள். மறுநாள் பிணமாய் மிதந்தாள்.
…….

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!