தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இன்று முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு டான்செட் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தத்தேர்வில் முதல் நாளான இன்று MBA மற்றும் MCA படிப்புகளுக்கும், 2ஆம் நாளான நாளை M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளுக்கும் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்காக சென்னை, மதுரை மற்றும் கோவை போன்ற 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 37,000 மாணவர்கள் இந்த டான்செட் தேர்வை எழுதுகின்றனர். முன்னதாக டான்செட் தேர்வில் பங்கேற்ப்பதற்காக மாநில முழுவதும் உள்ள அனைத்துவித பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.