சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். 3291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நீர்த்தேக்கத்தை பாதுகாக்கவும் தூய்மையாக வைத்துக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்துடன் சுற்றுலாத்துறையும் இணைந்து சைக்கிள் பேரணியை நடத்தியது. இந்தசைக்கிள் பேரணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்ததுடன் தானும் அந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், புல்லரம்பாக்கம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள பூண்டி கரையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை 6 கிலோமீட்டர் தூரம் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சைக்கிளை ஓட்டி சென்றார்.