நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து, மறைந்த விவேக் நினைவாக அவரது வீடு இருக்கும் தெருவுக்கு விவேக் பெயரையே வைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விவேக் மனைவியின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவேக் வாழ்ந்த வீடு இருக்கும் தெருவுக்கு அவரின் பெயரையே வைத்து அரசாணை வெளியிட்டார். இந்தநிலையில் இன்று ’சின்ன கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட புதுப்பெயர்ப்பலகையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் சென்னை மேயர் மற்றும் விவேக் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.