15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்த கோடைவெயிலிலும் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்திவருகிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத இந்தத் தொடரில் இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இதில் இவ்விரு அணிகளும் 21 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில் 13 முறை கொல்கத்தாவும், 7 முறை ஐதராபாத்தும் வெற்றிபெற்றுள்ளன. 1 ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. இந்தத் தொடரில் கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3ல் வெற்றிபெற்றுள்ளது. ஐதராபாத் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியும் இரு அணி ரசிகர்களுக்கும் விறுவிறுப்பு நிறைந்ததாகவே இருக்கும்.