15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 48ஆவது லீக் ஆட்டத்தில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இந்தபோட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியை முதல் இடத்தில் உள்ள குஜராத் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடரின் அறிமுக அணியான குஜராத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பஞ்சாப் அணியோ 9 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இந்தத்தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி எதிர்கொண்ட குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தநிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றிப்பெற்று அடுத்த சுற்றான ப்ளே-ஆப் சுற்றுக்கு இந்த தொடரின் முதல் அணியாக முன்னேற குஜராத் அணி முயற்றி செய்துவரும் வேலையில் புள்ளிபட்டியலில் முன்னேற பஞ்சாப் அணியும் தனது கடுமையான உழைப்பை காட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்ததொடரின் கடைசி சில போட்டிகளை பார்த்தால் புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கும் அணிகளே போராடி வெற்றிப்பெற்று முன்னேறி வருகின்றன. அந்தவரிசையில் பஞ்சாப் அணியும் இந்தபோட்டியில் தன் கடின உழைப்பைப்போட்டு வெற்றிப்பெறும் என ஐபிஎல் ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.