கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கையில் இன்று நிலைமை மோசமாக இருப்பதாகவும், இலங்கைக்கு பக்கத்துக்கு நாடு என்கிற அடிப்படையிலும், தமிழக மக்களின் நலன் கருதியும் இந்தியா உதவி செய்து வருவதாக கூறினார். இலங்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு செய்ய இருக்கும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது, மொழி திணிப்பை நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்தார். இத்துடன் பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கபட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும்போக மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என தெரிவித்த அவர், மீண்டும் பிரஷாந்த் கிஷோர் தமிழகத்திற்கு வந்து திமுகவிடம் ஒப்பந்தம் போட்டு கட்சியை வளர்ப்பார் எனக்கூறினார்.