நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை கராணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். அதேபோல் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.