ஐபிஎல் ரசிகர்களுக்கு இன்று டபுள் டமாக்கா என்று சொல்லலாம். மாலை 3.30 மணிக்கு உள்ள புள்ளிபட்டியலில் முதலில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோதும் போட்டிக்கு அடுத்ததாக இரவு 7.30 மணிக்கு நவி மும்பை பகுதியில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டி நடைபெற இருக்கிறது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இந்த 15ஆவது ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ இதுவரை விளையாடிய 8ல் எதிலும் வெற்றி பெறவில்லை. இதனால் 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்ததொடரில் வெற்றிக்கணக்கை இதுவரை தொடங்கவில்லை என்று அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தி தனது வெற்றிக்கணக்கை தொடருமா அல்லது ராஜஸ்தான் மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறுமா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.