அதிமுகவின் 2ம் கட்ட உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட அவைத்தலைவர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதிவுகளுக்கு இன்று விருப்ப மனு தாக்கல் நடைபெறுகிறது. இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் புறநகர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.