ராமநாதபுர மாவட்டம் அடுத்த ராமேஸ்வரம் தீவு பகுதிகளான மண்டபம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், மன்னார்வளைகுடா கடல் பகுதிகளில் கடல் பசு, டால்பின், அரிய வகை ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் சுமார் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை பெருந்தலை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆமையை மீட்டு உடற்கூறாய்வு செய்து, இறுதி சடங்கு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். முன்னதாக ஆமை உயிரிழந்தற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.