1984ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது போட்டி, இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், ஆசியக் கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்