15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 65ஆவது லீக் ஆட்டத்தில், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதவுள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெற இருக்கிறது. இதுவரை, இந்த இரு அணிகளும் 18 முறை நேருக்குநேர் எதிர்கொண்டுள்ளன. இதில் 9-ல் மும்பை அணியும், 8-ல் ஐதராபாத் அணியும் வெற்றிப்பெற்று உள்ளது. ஒரு போட்டி டையாகியுள்ளது. இந்தநிலையில், இதுவரை இந்தத்தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம், ஐதராபாத் அணி விளையாடிய 12 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், இந்தபோட்டித்தொடரில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்தஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.