“பெண்களின் குரல்” தமிழ் மாத இதழ் தமிழகம் முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில், முழுக்க முழுக்க பெண்கள் நலன் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள், உடல் நலம் குறித்த மருத்துவ தகவல்கள், உடல் ஆரோக்கியம் குறித்த உடற்பயிற்சி குறிப்புகள், சாதனைப்பெண்களைப் பற்றிய அரிய தகவல்கள், சமூகத்தில் உயர்ந்து நிற்கும் பெண்கள் குறித்த தகவல், பெண்ணுரிமை குறித்து பிரபல பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் கதைகள், கட்டுரைகள், அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் அவர்களின் ஈடுபாடு, பெண்களுக்கான சட்டம் குறித்த விழிப்புணர்வு, தொண்டு செய்வதில் பெண்களின் பங்கு, திரையுலக நட்சத்திரங்களின் சிறப்பு பேட்டிகள் மற்றும் சமூகத்தில் சாதித்த, சாதித்துக்கொண்டிருக்கும், சாதிக்க துடிக்கும் பெண்கள் பற்றிய கட்டுரைகளைத் தாங்கிய எண்ணற்ற தகவல்களுடன் ஒவ்வொருவரும் படித்து பாதுகாக்கும் ஓர் எழில்மிகு பெட்டகமாக வெளிவந்து பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், மக்களின் ஏகோபித்த ஆதரவும் பெற்று தமிழகம் முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கிறது. பெண்களின் குரல் மாத இதழ் தற்போது ஆப் வடிவிலும் கிடைக்கிறது.