day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திங்க் பாஸிட்டிவ் & பிக்

திங்க் பாஸிட்டிவ் & பிக்

எல்லா முடிவுகளுக்குமே ஆரம்பம் உண்டு. முற்றுப்புள்ளியைக் கமாவாக மாற்றும் சந்தர்ப்பங்களுக்காகக்தான் காத்திருக்க வேண்டும். ஆனால் அவை அத்தனை சுலபமாக நம் வசப்பட்டு விடுமா என்று கேள்விகளை நம்முன் நீட்டி விடையை நிரப்பச் சொல்கிறது விதி.
சிலந்தியின் வலைப்பின்னலைப் போல் நம் கண்களுக்குச் சிக்காத ஏதோவொரு நூலிழைகள் அன்றாடம் இரை தேடும் கழுகுகாய், பயிர் அரிக்கும், விழுங்கும் பூச்சியாய் நலிந்து போய்க் கிடக்கிறது.
சேகரிக்கும் தேனிக்களைக் காப்பது போல நாம் நம்மைக் காத்துக் கொள்ள மெனக்கெடல்கள் அதிகம் வேண்டியிருக்கிறது. இயல்பு நிலை கடந்த ஒரு கட்டமைப்பில் சிக்கிக்கொண்டு இருக்கும் இந்நாளில் நாம் நமக்காக சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டியது நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்தான். இரண்டிற்கும் எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை நம்பிக்கை நம்மைச் சுமப்பது, தன்னம்பிக்கை நம்மைச் சார்ந்தவர்களையும் சேர்ந்து சுமப்பது.
அடுக்கு மாடிக் கட்டிட த்தின் முதல் வரைபடம் கனமில்லாத ஒரு வெற்றுத்தாளில் கூர்முனை கொண்ட பென்சிலினால் உருவாக்கப்படுவதுதான்.
ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுமதி பெற்று முன்பின் அறியா விரல்களில் முளைத்திருக்கும் கண்ணாடிக் குப்பிக்குள் நம் ரத்தத்தையும், ஊடுருவும் ரசாயனக் கதிர்களையும் சுமக்கிறோமே அம்மாதிரி அதிகம் வேண்டாம் மாதம் அல்லது வாழ்வின் ஒரு நாளிலாவது நம் மனதை சுயபரிசோதனை செய்து கொள்கிறோமா?
நரை கூடி கிழப்பருவம் எய்தும்போது கூட உதிரும் சிகைக்கு கருப்பு மையிடுவதைப் போல நமது இயற்கை கனவுகளையும் ஆசைகளையும் ஒரு மூடி போட்டு வெளி உலகத்திற்காக மறைத்துக் கொண்டு எது நமது தேவை, எது நமது லட்சியம் என்ற இலக்கில் இருந்து விலகி அனைத்தும் பரிபூரணமாய் பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு அலிபியை உருவாக்கிக் கொள்கிறோம்.
நண்பர்களைக் கொண்டு உன்னை இனம் காண்பார்கள் என்ற கூற்றில் எத்தனை சதவிகிதம் உண்மையுள்ளது என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய கேள்விகளுக்கும் இங்கே பதிலில்லை.பெரும்பாலும் நம் வாழ்க்கையின் கோடிட்ட இடங்கள் நிரப்பப்படுவதே இல்லை, சில குறிப்புகளை இறைவன் வகுக்கும் போதும் அதை வெற்றிடமாகவே விட்டு வைத்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.
வாழ்க்கை கணித மதிப்பீடுகள் அல்ல, ஆனால் பெண்களின் வாழ்வில் மட்டும் கழித்தல்கள் அதிகம். அஞ்சறைப் பெட்டியில் அளவுகோல் கரண்டிகளில் அவள் தன் கூட்டலையும் வகுத்தலையும் வைத்துக் கொண்டாள். காலம் மாறியது, சதியேற்றம் சகிக்க முடியாததாய் போக, சாதிக்கத் துணிந்தார்கள். அவர்கள் வாதிக்க முனைந்த சொக்கட்டானின் சோழியான நாக்குகளோடு !
நரம்பில்லா நாக்குகளின் நீள அகலத்திற்குள் அடங்காத காட்டாறாய் அவள் நீந்தினாள். உயரம் பெற்றவளின் நெஞ்சுரம் சுடுகுருதியாய் பீறிட்டது.
மருதோன்றி ஊறிய கால்கள் சலங்கையின் விலங்கை உடைத்து சரித்திரம் பேசியது. குருவியின் கூட்டிற்குள் புத்தொளி வீசியதோடு சில புல்லுருவிகளையும் முதலில் நாம் தவிர்க்க வேண்டியது. எதிர்மறை எண்ணங்கள் ஜாடியில் இருக்கும் நீரின் கணத்தைக் குறைக்க. அதைக் குடித்தே ஆக வேண்டும் என்பது இல்லை. அதை செடிக்கு ஊற்றலாம், ஜன்னலின் கம்பிகளில் கதை பேசும் குருவிகளுக்கும் பறவைகளுக்கும் வைக்கலாம். இப்போதைய கொரோனாவிற்காகக் குறைந்த பட்சம் கை அலம்பவாவது பயன்படுத்தலாம்.
அந்தக் கண்ணாடி ஜாடியின் கணம் நிரம்பிய நீர் போலத்தான் நம் எண்ணங்களும். அதை நாம் மட்டும் சுமக்க வேண்டியது இல்லை ஆக்க பூர்வமான விஷயங்களில் அதை விதைக்கலாம்.
அத்தனை அடிகளையும் வாங்கும் பூமியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அதைத்தான். சிறிதான கோடுகளுக்குப் பக்கத்தில் இன்னும் பெரிய கோட்டை வரைந்து கணக்கை நேர்படுத்துவதைப் போலத்தான் நாம் எதிர்மறையான எண்ணங்களைத் தடுக்க முடியும்.
நம் எல்லைகளை நாமே வகுக்க வேண்டும். அது என்ன, எதுவரையில் என்பதை உணர வேண்டும். சிந்தனை என்பதற்கே கவலை என்ற அர்த்தம் தான். அலெக்ஸாண்டரின் வருகையைத் தவிர்ப்பதற்கு என்று அல்லும் பகலும் ஒரு நல்ல தலைவனைத் தேடி அலைந்த சாணக்கியருக்குத் தெரிந்தது தன் எல்லை எது, அதை நோக்கி எப்படிப் பயணிக்கவேண்டும் என்று. தான்மட்டும் இன்றி தன்னைச் சார்ந்த அனைவரையும் அவர் அதற்குத் தயார்படுத்தினார். தான் நினைத்தவற்றை அடையவும் செய்தார். ஒரு மாபெரும் போராட்டத்தின் வெற்றியை அவர் அடையக் காரணம் தன்னம்பிக்கையும், நம்பிக்கையும், சாதுர்யம் இவை அனைத்தும் தாண்டி ஒற்றுமை என்பதுதான் அந்த வெற்றியின் பலம்.
நம் எண்ணங்களுக்கும் ஒற்றுமை வேண்டும். நெடுங்கதையாகத் தொடரும் பலம் பொருந்திய இரும்புச்சங்கிலிகள் கூட இணைப்புகள் இல்லாமல் இருந்தால் அவற்றின் பலவீனத்தினால் என்ன லாபம் இருக்க முடியும்.
காலாவதியான உணவை நாம் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளை விடவும் காலம் கடந்த கவலைகளைச் சுமந்திருப்பதாலும் எதிர்காலம் பற்றிய பயத்தில் உறைந்து போவதாலும் எந்த விதமான முடிவும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, நம் மனதின் கனம் அதிகரித்துக் கொண்டே போகப்போகிறது. அந்தக் கோபங்களினால் புகையின் சாபத்தில் கரையும் நுரையீரல்களைப் போலத்தான் ஆகிப்போகிறோம்
மனப்புண்களைக் கண்ணாடியின் பாதரசங்கள் அறியாது. அறிய முயலும் போது அதை வெளிப்படுத்தும் யுக்தியை நாம் கொண்டிருக்க வேண்டும். அதுதான் தன்னம்பிக்கையின் உச்சம். பெண்மையின் கருவறை திறந்து குதிக்கும் பிள்ளையின் விழிப்பில் எழும் வலியைத் தாங்குவதைப் போல! துயரம் மிகுந்த இந்தக் கணங்களைச் சுமப்பதற்கு நமது தோள்களுக்கு மட்டுமல்ல, நம் இதயத்திற்கும் வலிமை தேவை.
-லதா சரவணன்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!