day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

காதலில் வெற்றிபெற ஆலோசனைகள்…

காதலில் வெற்றிபெற ஆலோசனைகள்…

காதல். இந்த மூன்றெழுத்து பலரது வாழ்வை இனிமையாக்கியதும் துயரமாக்கியதும் உண்டு. காதல் ஒரு உணர்வு என மேலோட்டமாகக் கடந்து விட முடியாது. ஒவ்வொரு தனிமனித வாழ்வையும் நகர்த்திச் செல்லும் வினையூக்கி எனச்சொல்லலாம். காதல் ஏன் சில நேரங்களில் இனிக்கிறது. சில நேரங்களில் கசக்கிறது? காதலை நாம் எப்படிக் கையாள வேண்டும்? நேர்மறையாக அணுகினால் பரவசத்தையும், எதிர்மறையாகப் பார்த்தால் மரணத்தையும் தருவதேன்? உண்மையிலேயே உளவியல் ரீதியான காதல் குறித்த மர்மங்கள் என்ன என்பது குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியம்.

உண்மையான காதலாக இருந்தால் வெளிப்படுத்த வேண்டும். ரொம்ப நாளாக மறைமுகமாக வைத்துக்கொள்ளக்கூடாது. காதலனாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் சரி, யாராவது அவர்களைப்பற்றித் தவறாகச் சொன்னால், சொன்னவரிடம் போய் சண்டைபோடாமல் நம்முடைய மூளையைக் கொஞ்சம் பயன்படுத்தி காதலன், காதலி உண்மையானவரா என்று ஆராய முற்பட வேண்டும். எந்த ஒரு பொண்ணோ, பையனோ ஏமாற்றுபவர் என்று தொிந்தால் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அந்த இடத்தில் எல்லோரும் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல தான் காதலிப்பதை ஓப்பனாகச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு கால கட்டத்திலும் காதல் என்பது மாறிக்கொண்டே வரும். அவசரப்பட்டு காதல் பண்ணுவது அல்லது கூட இருக்கிறவர்களே சேர்த்து வைப்பது அல்லது அந்தப் பொண்ணு அழகா இருக்கா, பையன் பணக்காரனாக இருக்கிறான் , லைப்ல சீக்கிரம் செட்டிலாக வேண்டும் என்ற காரணத்துக்காக எல்லாம் காதல் செய்கிறார்கள். காதல் என்பது தானாக வரவேண்டும். அதே நேரத்தில் நம்பிக்கை என்பது ஒரே நாளில் வருவதுகிடையாது. அதனால் நிறைய டைம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் காதல் தோல்விக்குக் காரணம் என்னவென்றால் பிடிக்கும், பிடிக்கவில்லை என்று சொல்லுகிற விதம். அதாவது கையாள்கிற விதம்தான். உதாரணத்துக்கு பெண்ணை எடுத்துக்கொள்வோம், பெண் வந்து ஆணிடம் சொல்லும்போது. உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. உனது வருமானம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். குறைவாக உள்ளது என்று பேசுவது அல்லது உன்னை விட எங்க அப்பா, அம்மாதான் பொிது என்று சொல்வது. இதைத்தான் சொல்லும் விதத்திலும் சொல்லவேண்டும். பெண்களைப் பொருத்தவரையில் ஆண்களை வெறுப்பேற்றினால் நம்மை விட்டு விலகி விடுவார்கள் என்று முயற்சி செய்வார்கள். அது தப்பான முடிவாக மாறி ஆண்களைத் தூண்டும் விதமாக மாறிவிடும். இது ஆண்களின் நம்பிக்கைக்கு எதிராக மாறும்போது, ஆவேசப்படுவதும், ஒரு தவறான முடிவு எடுக்கும் விதமாகவும் மாறிவிடுகிறது. ஒரு ஆணின் தன்மானத்தை தூண்டும் விதமாக அமையும்போது அவன் ஒரு தவறான நடவடிக்கையைக் கையில் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதனால், பெண்கள் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிலநேரத்தில் பிளாக்மெயிலிங் என்பது அதிகமாகக் காணப்படும். ஆண், நான் வந்து உங்கள் பெற்றோரிடம் சொல்லவா? அண்டை வீட்டாரிடம் சொல்லவா என்று சொல்லும்போது பெண்கள் ரொம்பவே பீதி அடைந்துவிடுகிறார்கள். நம்முடைய காதல் விசயம் யாருக்குமே தொியாது, திடீர் என்று காதலைப்பற்றிச் சொல்லும்போது நம்மை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்களே என்று பயப்படுவார்கள்.
இன்னொரு தகவல், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தான் காதலிப்பதை நண்பர்களிடமோ அல்லது வீட்டில் உள்ள நபர்கள் யாரிடமாவதோ தகவல் தொிவிப்பது நல்லது. ஏனென்றால், பெரும்பாலும் காதல் செய்கிறவர்களுக்குத் தனது காதலனோ அல்லது காதலியின் நல்ல விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தொியும். அதாவது காதல் கண்ணை மறைக்கும் என்பார்களே அதுபோன்று. மற்றவர்களுக்கு அவர்களின் இன்னொரு முகத்தைப்பற்றித் தொிந்தால் நமக்குத் தகவல் சொல்ல ஏதுவாக இருக்கும். மூடி மறைப்பது காதலுக்கு நல்லதல்ல. நல்ல காதலை நாலுபேருக்குச் சொல்லவேண்டும். எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒருசிலர் காதல் செய்யும்போதே அவசரப்பட்டு உடல்ரீதியாகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இது வெளிநாட்டுக் கலாச்சாரத்துக்கு வேண்டும்என்றால் ஒத்துப்போகலாம். ஆனால், நம்முடைய கலாச்சாரத்துக்கு இது எதிரானது. அதையும் மீறி உடல்ரீதியாக ஒரு உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டால் அதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்தான். இப்படி ஒரு பெண் தவறான உறவு ஏற்படுத்திக்கொள்வதால், ஆண் என்னசொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள். இதுபோன்று நடக்கும்போதுதான் காதல் என்பது வேறு ஒரு பாதைக்குத் திசைமாறிச் செல்கிறது. எப்படிப் பார்த்தாலும் பாதிப்பு என்பது பெண்ணுக்கே அதிகமாக உள்ளது.
காதல் என்பது ரொம்ப முக்கியமான விசயம், ரொம்ப மதிப்புமிக்கது. ஆனால், யாரை லவ் பண்ணுகிறோம், எதுக்காகப் பண்ணுகிறோம் என்பது மிக மிக முக்கியம். காதல் என்பது சாதாரணமாக ஒரு அன்புதான். பள்ளிக்கூடக் காதல் என்பது ஒரு ஜாலியானது. அதற்குப் பின்பு நடைமுறையில் இருக்கிற வேலைக்குச் செல்வது, குடும்பம் நடத்துவது என்பது எல்லாம் அவர்களுக்குத் தொியாது. ஆனால் கல்லூரிக்காதல் என்பது அதையும் தாண்டி ஒரு படி வேலைக்குச் செல்வதில் இருந்து குடும்பம் நடத்துகிற வரைக்கும் தொியும். ஆனால், அதற்குப் பின்பு குழந்தைகளுக்குத் தேவையானவைகளைப் பூர்த்தி செய்வது என்பது தொியாமலிருக்கலாம். அதேநேரத்தில் வேலைக்குச் செல்லும்போது வருகின்ற காதல் என்பது குடும்பத்தில் உள்ள கஷ்ட நஷ்டங்களைத் தொிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். தாய், தந்தையரை எதிர்க்கக்கூடாது. அவர்களின் சாபத்தோடு வெளியில் செல்லவேண்டாம் என்ற எண்ணம் தோன்றும். ஒவ்வொரு கால கட்டத்திலும் காதல் என்பது ஒருபக்கமாகவே செல்கிறது. இரண்டு பேர் காதல் செய்து அது தோல்வி அடைந்தாலோ அவர்கள் சரியான எண்ணத்தோடு, சரியான புரிதலோ தனக்கு என்ன தேவை என்று அடுத்த லெவல் போனால் அது சரியான முடிவாகவே இருக்கும்.
இன்னொரு தகவல், ஒருவரைக் காதலிக்கும்போது, ஏதோ ஒரு காரணத்துக்காக அடுத்தவரை பிடித்துவிட்டது என்பதற்காகக் காதலித்தவரை விட்டு விலகிச்செல்வது என்பது தவறு. இன்னொருவருக்கு வாக்கு கொடுப்பது என்பது, ஒரே நேரத்தில் இரண்டு நபரைக் காதலிப்பதும் தவறுதான். காதலிக்கும்போது ஒரு சிறு தவறு நடந்துவிட்டால் அதற்காக ஒரு வெரைட்டிக்காக மாறுவது என்பதும் தவறு. அதுதான் லவ் பண்ணிக்கொண்டே இருக்கும்போது செய்கின்ற தவறுகள்.
ஒருசில காதல் உண்மையிலேயே தோல்வியில் முடியும். உதாரணத்துக்கு மதம், ஜாதி, படிப்பு அதுமட்டுமல்லாமல் எவ்வளவோ சமூக நடைமுறைகள், அப்பா, அம்மாவுக்குப் பிடிக்காமல் போகலாம், வயது வித்தியாசம் இருக்கலாம். இப்படிப் பல காரணங்கள் இருக்கலாம். அதேபோல அப்பா, அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்களை எதிர்த்துக்கொண்டு நம்மால் வாழ முடியாது என்று தொிந்தால் நல்லபடியாகப் பிரிந்துவிடலாம்.
திருமணத்திற்குப் பின் இருவரிடம் காதல் என்பது குறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லை. காதல் என்பது குறையாது. அது பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வைத்துக்கொள்வோம். எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு எவ்வளவு வேகமாக ஓடுகிறோம், அதுதான் காதல். அந்த எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்ட பின்பு தண்ணீர் குடிப்பது, இளைப்பாறுதல் இதுதான் திருமண வாழ்க்கை. காதலிக்கும்போது அவர்களுடைய எண்ணம் எல்லாம் இதை எப்படியாவது அடுத்த லெவலுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் கிப்ட் கொடுப்பது, வெளியில் சுற்றுவது, ஒருவரையொருவர் அட்ராக் பண்ணுவது, விட்டுவிடாமல் இருப்பது என்று நினைப்பது, ஆசையாகப் பேசுவது, நேரம் ஒதுக்குவது இதுஎல்லாமே நடக்கும்.
ஆகையால், வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டுபேரும் ஓடுகிறார்கள். வெற்றி பெற்றபின்பு, நான்தான் வெற்றியாளராக ஆகிவிட்டேனே என்ற அணுகுமுறையில் மாற்றம் தொியும். அதேநேரத்தில் திருமணம் ஆன பின்பு அதனுடைய வெளிப்படுத்தும் தன்மை மாறும். இரண்டாவது உண்மையான கடமைகள் அப்பொழுதுதான் நம் கண்ணுக்குத் தொியும். திருமணம் ஆன பின்புதான் சம்பாதிக்க வேண்டும், குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகள் என்றாகிவிட்டால் என்ன செய்வது, பொியவர்களை எப்படிக் காப்பாற்றுவது இப்படிப் பல பொறுப்புகள் இருக்கும். பல ரெஸ்பான்ஸ்பிலிட்டி இருக்கும். அந்த நேரத்தில் இதுபோன்ற விளையாட்டு எல்லாம் விளையாட முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் காதல் குறையவில்லை, மாறிவிட்டது.
தொடரும்….

-டாக்டர் அபிலாஷா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!